செஸ்டர்: பிரிட்டனின் செஸ்டர் வனவிலங்கு பூங்காவில் சோயி, பால்ட்ரிக் என்ற இரு குரங்குகள் உள்ளன. இந்த காதல் ஜோடிக்கு புதிதாக இரட்டை குரங்கு ஒட்டிப் பிறந்துள்ளன. 10 கிராம் இடைகொண்ட இந்தக் குரங்குகளின் உயரம் 2 இன்ச் ஆகும்.
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குரங்குகள்! - Chester Zoo
குரங்கு இனத்தில் மிகச் சிறியதான குக்குரங்கு இரண்டு பிரிட்டனில் உள்ள செஸ்டர் வனவிலங்கு பூங்காவில் ஒட்டிப் பிறந்துள்ளன.
இதுகுறித்து அதன் பராமரிப்பாளர், செப்டம்பர் மாத தொடக்கத்தில்தான் இவை பிறந்தன. இவற்றை பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். இவற்றின் பாலினம் என்ன என்பது இன்னும் சில மாதங்களில் தெரியும் என எதிர்பார்க்கிறேன். இவை நன்றாக வளர்ந்தால், 130 கிராம் இடையும், 8 இன்ச் உயரமும் இருக்கும்.
இந்த குரங்கினம் மேற்கு பிரேசில், தென்கிழக்கு கொலம்பியா, கிழக்கு ஈகுடார் மற்றும் கிழக்கு பெருவில் உள்ள மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். தற்போது இந்த இனம் அழிந்து வருகிறது. செல்லப் பிராணியாக வளர்ப்பதற்காக பிடிக்கப்படுகிறது என்றார்.