தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

துருக்கி மீது விமர்சனம்; அமெரிக்க தூதருக்கு சம்மன் - 1915 அர்மேனிய படுகொலை

பண்டைய துருக்கி பேரரசு மீது விமர்சனக் கருத்தை முன்வைத்த காரணத்தால் அந்நாட்டு தூதருக்கு துருக்கி அரசு சம்மன் அளித்துள்ளது.

Turkey
Turkey

By

Published : Apr 25, 2021, 8:03 PM IST

அர்மேனிய மக்கள் மீது 1915ஆம் ஆண்டு அன்றைய துருக்கு ஒட்டமான் பேரரசு நடத்திய தாக்குதலில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆண்டுதோறும் அதன் நினைவுதினம் ஏப்ரல் 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு நினைவு தினத்தை ஒட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அஞ்சலி கருத்தை வெளியிட்டார். அதில் துருக்கி அரசு இன படுகொலை மேற்கொண்டது என சம்பவத்தை குறிப்பிட்டார்.

ஜோ பைடனின் இந்த கருத்தால் சீண்டப்பட்ட தற்போதைய துருக்கி அரசு கண்டனத்தை தெரிவித்துள்ளது. அத்துடன் துருக்கி வெளியுறவுத் துறை அமெரிக்க தூதர் டேவிட் சட்டர்பீல்டை இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க:பெருந்தொற்றுக்கு இடையிலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி

ABOUT THE AUTHOR

...view details