தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 22, 2020, 2:05 PM IST

ETV Bharat / international

ஜூனில் ’துருக்கி’ பேக் டூ ஃபார்ம் - ஜனாதிபதி நம்பிக்கை!

அங்காரா: கரோனா வைரஸை கட்டுப்படுத்தி ஜூன் மாதத்தில் பழைய நிலைக்கு துருக்கி வந்துவிடும் என அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார்.

sds
sdsd

கரோனா வைரஸ் பிடித்து வைத்திருக்கும் சிறையிலிருந்து வெளிவர முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், துருக்கி நாட்டில் 90 ஆயிரம் நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், "இஸ்லாமியரின் புனித மாதமான ரமலான் மாதம் முடிவதற்குள் கரோனா வைரஸை கட்டுப்படுத்தி ஜூன் மாதத்தில் துருக்கி நாடு பழைய நிலைக்கு வந்துவிடும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பொருளாதார தாக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடி இந்தக் கரோனா பெருந்தொற்றுதான்" என்றார்.

இதற்கிடையே, துருக்கி நாட்டில் வித்தியாசமாக வார இறுதி நாள்களில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, 65 வயதுக்கு மேற்பட்டோரும், 20 வயதுக்கு கீழ் உள்ளோரும் வீட்டைவிட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சமூக இடைவெளியுடன் முத்தப் போட்டி... கடை திறப்பில் ருசிகரம்!

ABOUT THE AUTHOR

...view details