திபெத் மற்றும் கிழக்கு துருக்கிஸ்தானில் நிகழ்ந்தேறிய கொடூரமான குற்றங்களின் ஒன்பதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் லண்டனில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன் இங்கிலாந்தில் உள்ள திபெத்திய மற்றும் உய்குர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
திபெத் மற்றும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான குளோபல் அலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) 19ஆவது மத்தியக் கமிட்டியின் உறுப்பினரான சென் குவாங்குவோ, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது பெரிய பொறுப்பில் இருக்கிறார். வருங்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இவர் அமர்வதற்கான வாய்ப்புள்ளது. அவர், திபெத் மற்றும் கிழக்கு துருக்கிஸ்தானை ஆட்சி செய்த மிக இரக்கமற்ற சீனத் தலைவர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கூட்டணி ஐநா மன்றத்திற்கு ஒரு பரிந்துரையை அளித்து சிறப்பு அமர்விற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், ஐநா மன்றத்தின் உறுப்பு நாடுகள் சீனா மீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும், திபெத் மற்றும் கிழக்கு துருக்கிஸ்தானில் நடைபெறும் இனப்படுகொலை குற்றங்களுக்கு சீனா பொறுப்பேற்கவேண்டும்" என்று வலியுறுத்துகிறது.