தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மற்றுறொரு பிரிக்ஸிட் வாக்கெடுப்பு கிடையாது- பிரிட்டன் சபாநாயகர் எச்சரிக்கை - பிரிக்ஸிட்

லண்டன்: பிரிக்ஸிட் குறித்து மூன்றாவது வாக்கெடுப்பு கிடையாதென பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கவ் தெரிவித்துள்ளார்.

Third Brexit vote

By

Published : Mar 19, 2019, 3:10 PM IST

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு மார்ச் 29ஆம் தேதி வெளியேறுவதற்கான முயற்சிகளை அந்நாட்டு பிரதமர் தெரெசா மே மேற்கொண்டுவருகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தெரெசா மே பிரிக்ஸிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், இரண்டு வாக்கெடுப்புகள் தோல்வியில் முடிவடைந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற 11 நாட்களே உள்ள நிலையில் மற்றுமொரு முறை பிரிக்ஸிட் வாக்கெடுப்பு நடத்த கன்ஸர்வேட்டிவ் கட்சி விரும்புகிறது.

இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நேற்று பேசுகையில், இரு முறைக்கு மேல் ஒரு மசோதா வாக்கெடுப்பில் தோற்றால், மேற்கொண்டு திருத்தம் செய்யாத வரை மீண்டும் வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details