தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரதமர் தெரஸா மே பதவி விலகும் காலத்தை தீர்மானிக்கலாம்! - therasa may

லண்டன்: பிரதமர் தெரஸா மே, வரும் காலங்களில் பதவி விலகுவதற்கான காலத்தை விரைவில் தீர்மானிக்கலாம் என்று அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கமிட்டியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

therasa may

By

Published : May 11, 2019, 6:43 PM IST

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. பிரதமர் தெரஸா மே, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அதற்கான ஒப்புதலை மூன்று முறை பெற முயற்சித்தார். எனினும், இறுதியாக கடந்த மார்ச் 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரஸா மே கோரிக்கை விடுத்ததையடுத்து, பிரிட்டன் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்தனர். இந்நிலையில், அடுத்த முறை பிரக்ஸிட் உடன்படிக்கையை நிறைவேற்றுதற்காக எதிர்கட்சிகளுடன் தெரஸா மே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கமிட்டியினரை தெரஸா மே அடுத்த வாரம் புதன்கிழமையன்று சந்திக்க உள்ளார். இங்கிலாந்தில் கடந்த 1922ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கமிட்டியானது நாடாளுமன்றத்தில் உள்ள கீழவை உறுப்பினர்களுக்கான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுதவிர மேலவை உறுப்பினர் குறித்த கருத்துகளை தெரிவிப்பதும், கட்சியின் தலைவரை தேர்வு செய்வதிலும் இந்த கமிட்டி முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்நிலையில், இந்த கமிட்டியில் தலைவரான கிரஹாம் பிராடி, பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்த முடிவை தெரஸா மே அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்திற்கு பின் தீர்மானிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தெரஸா மே, கடந்த மார்ச் மாதம் பிரக்ஸிட் ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details