யுஎஸ் ஓபன், பாராலிம்பிக்கில் பணியாற்றிய வெனிசுலாவைச் சேர்ந்த 40 வயதான டென்னிஸ் நடுவர் அர்மாண்டோ பெலார்டி கோன்சலஸ் இரண்டரை வருடம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டென்னிஸ்ஒருங்கிணைந்த பிரிவு தெரிவித்தது.
இதுகுறித்து டென்னிஸ் ஒருங்கிணைந்த பிரிவு, கடந்த 2017, 2018 ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன், 2016 ரியோ பாராலிம்பிக்கில் பொலார்டி கோன்சலஸ் பணியாற்றியுள்ளார்.
இவர் 2018ஆம் ஆண்டு நடுவரின் டிஜிட்டல் சாதனத்தில் போட்டி மதிப்பெண்களை தவறான முறையில் மாற்றுவதற்காக இரண்டு முறை முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தோம், அவர் எதற்கும் ஒத்துழைக்கவில்லை. பின்னர் ஆதாரங்களின் அடிப்படையில் பெலார்டி கோன்சலஸ் இரண்டரை ஆண்டுகளுக்கு எந்தவொரு அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் நிகழ்வையும் நடத்துவதற்கோ அல்லது கலந்துகொள்வதற்கோ விசாரணை அதிகாரி ரிச்சர்ட் மெக்லாரன் தடை விதித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.