தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'அதிகளவில் பொருள்கள் வாங்கி குவிப்பதைத் தவிருங்கள்'- இது இங்கிலாந்து செவிலியின் காணொலி - வருந்தும் இங்கிலாந்து செவிலி

இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவையில் பணிபுரியும் செவிலி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் கரோனா சூழல் காரணமாக அதிகளவில் பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

tearful-uk-nurse-urges-stop-to-panic-buying
tearful-uk-nurse-urges-stop-to-panic-buying

By

Published : Mar 22, 2020, 1:12 PM IST

சிறப்பு பல்பொருள் அங்காடிக்கு 48 மணி நேர வேலையை முடித்துவிட்டு தான் சென்று பார்க்கும்போது எந்த அத்தியாவசிய பொருள்களும் இல்லை என இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலி ஒருவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.

டான் பில்ப்ரோ என்னும் அந்தச் செவிலி, கரோனா பாதிப்பின் காரணமாக முக்கியப் பராமரிப்பு செவிலியாகப் பணியாற்றினார். அவர் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் அதிகளவில் பொருள்களை வாங்குவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.

வருந்தும் இங்கிலாந்து செவிலி

இதுகுறித்து பேசிய அவர், 'நான் எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. கடைகளில் இருக்கும் அலமாரிகளில் இருக்கும் அடிப்படை உணவுப் பொருள்களை எடுத்துச் செல்கின்றனர். இதை நீங்கள் நிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.

கரோனா தொற்று பரவிய நாள் முதலே சிறப்பு பல்பொருள் அங்காடிகளிலிருந்து அடிப்படை உணவுப் பொருள்களை மக்கள் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகப் பரவின. இதுவரை இந்தக் கொடிய வைரஸ் தொற்றுக்கு 13 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க... கரோனா பீதி: மருந்து நிறுவனங்களுக்கு மோடி வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details