கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. அந்த வகையில், மாடர்னா ஆராய்ச்சி நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒரு பகுதியான NIAID(தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம்) உடன் இணைந்து கரோனா தடுப்பூசி மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளன.
இந்த மருந்துக்கு mRNA-1273 எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, தடுப்பூசி மருந்தின் இறுதிக்கட்ட பரிசோதனைக்கு 30 ஆயிரம் பங்கேற்பாளர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாடர்னா பயோடெக் நிறுவனம் வெற்றிகரமாக தடுப்பூசியை உருவாக்கினால், சுவிட்சர்லாந்திற்கு 4.5 மில்லியன் டோஸ் கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டுள்ளதாக, சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.