சுவிட்சர்லாந்து நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்க பொதுவாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. அந்நாட்டில் உள்ள 26 மாநிலங்களிலும் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் தன்பாலின திருமணத்திற்கு ஆதரவாக 64.1 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதன் மூலம், தன்பாலின தம்பதிகளுக்கும் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்கு குடியுரிமை கிடைக்க வழிவகைச் செய்யப்படும்.
85 லட்சம் மக்கள்தொகை கொண்டு சுவிட்சர்லாந்து பொதுவாகவே பாரம்பரிய வழக்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடாகும். 1990-இல்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது.