தமிழ்நாடு

tamil nadu

ரஷ்யாவில் குழந்தைகளுக்கு  ஸ்புட்னிக் வி தடுப்பூசி?

By

Published : Jul 6, 2021, 12:48 PM IST

12 வயது முதல் 17 வயது கொண்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில், அதற்கான சோதனையை ஸ்புட்னிக் வி தொடங்கியுள்ளது.

Sputnik V
Sputnik V

மாஸ்கோ : ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது தொடர்பான ஆரம்ப கட்ட சோதனை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாஸ்கோ துணை மேயர் அனஸ்தேசியா ரகோவா கூறுகையில், “பெரியவர்களை போல் 12-17 வயதிற்குள்பட்ட பதின்ம வயது இளையோருக்கும் தடுப்பூசி போடும் திட்டமுள்ளது.

இதற்கான ஆரம்ப கால சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்புட்னிக் வி தடுப்பூசி கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக தீவிரமாக செயலாற்றுகிறது. அதேபோல் குழந்தைகளை கோவிட் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து காக்கவும் செய்யும்.

இதுவரை நாட்டின் 146 மில்லியன் (14 கோடியே 60 லட்சம்) மக்கள் தொகையில் 23 மில்லியன் (2 கோடியே 30 லட்சம்) மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கரோனா பாதிப்புகள் சில இடங்களில் அதிகரித்து காணப்படுகின்றன” என்றார்.

ரஷ்யாவில் நேற்று (ஜூலை 5) 24 ஆயிரத்து 353 புதிய பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை 56 லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 579 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க : ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஜெய்

ABOUT THE AUTHOR

...view details