கோவிட்-19 தொற்று உருமாறி பல வகை தொற்றுகளாக தற்போது பரவிவருகிறது. அதில், டெல்டா வகை தொற்று உலகளவில் அதிக தீவிரத்தன்மையுடன் பரவிவருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசிகளின் பாதுகாப்புத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருன்றனர்.
அதன்படி, ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி டெல்டா வகை கரோனாவுக்கு எதிராக 90% பாதுகாப்பு தருவதாகவும், உயிரிழப்புக்கு எதிராக 100% பாதுப்பு தருவதாகவும் ரஷ்ய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானி செர்கே நெடிஸ்வோ தெரிவித்துள்ளார்.