ஸ்பெயின் நாடாளுமன்றத்துக்கு பதவிக்காலம் முடியும் முன்னரே இந்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 350 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி 123 இடங்களைக் கைப்பற்றியது. 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சிக்கு 85 இடங்களே கிடைத்திருந்தன. அதேநேரத்தில், முந்தைய தேர்தலில் 123 இடங்களைக் கைப்பற்றியிருந்த கன்சர்வேடிவ் கட்சியால் 66 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது.
கட்டலோனியா விவகாரத்தை கையிலெடுத்து வலதுசாரி கட்சிகள்
கட்டலோனியா விவகாரத்தை முன்னெடுத்து பரப்புரையில் ஈடுபட்ட வலதுசாரி கட்சிகளான வோக்ஸ், சியூடாடேனோஸ் ஆகிய கட்சிகள் முறையே 24, 57 இடங்களில் வெற்றிபெற்றன.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பிரிவினைவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து சிறையில் உள்ள தலைவர்களைக் கொண்ட இரண்டு கட்சிகள் 22 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
நான்கு ஆண்டுகளில் 4 முறை தேர்தல்கள்
ஸ்பெயினில் இடதுசாரி கட்சிகள் வெற்றிபெற்றிருந்தாலும் அக்கட்சி ஆட்சியமைக்க கூட்டணி தேவைப்படுகிறது. அதற்காக அக்கட்சி பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறப்பட்டது. எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து யாரும் பதவியேற்க முடியாத நிலை தொடர்ந்தது. இந்த நிலையில் இதே ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் நேற்று (10ஆம் தேதி) தேர்தல் நடந்தது.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்தனர். ஸ்பெயினில் 2015ஆம் ஆண்டு முதல் நிலையற்ற அரசு தொடர்ந்து வருகிறது. அங்கு ஆட்சியமைக்க இடதுசாரிகள், வலதுசாரிகள் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
அங்குள்ள மக்களும் தெளிவற்ற முடிவையை வழங்கிவருகின்றனர். இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை பொதுத்தேர்தல் நடந்துள்ளது. எனினும் உருப்படியாக அரசு எதுவும் அமையவில்லை.
ஸ்பெயின் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் இதற்கிடையில் வெளியாகியுள்ள தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள், ஸ்பெயினில் ஆட்சியமைக்க யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகின்றன. இது நடக்கும்பட்சத்தில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் கல்லறையை அகற்ற முடிவு