உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. பல நாடுகளில் தடுப்பூசிகளை மனிதர்கள் மீது சோதனை செய்து வருகின்றனர்.
ஸ்பெயினில் 2022 வரை கரோனா தடுப்பூசி - பரிசோதனை மீதான வாட் வரி நீக்கம்! - ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஒப்பந்தம்
மாட்ரீட்: ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஒப்பந்தத்தின்படி, 2022ஆம் ஆண்டு வரை கரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை மீதான வாட் வரியை நீக்கிட ஸ்பெயின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வாட்
இந்நிலையில், புதிதாக எட்டப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின்படி, 2022ஆம் ஆண்டு வரை கரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை மீதான வாட் வரியை நீக்கிட ஸ்பெயின் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முடிவானது, கடந்த திங்களன்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட வழிகாட்டுதலின் பிறகு வந்துள்ளது. அதில், "மாநிலங்கள் வாட் வரிகளை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும் அல்லது "தற்காலிகமாக" விழுக்காடுகளை குறைக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.