தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா : உங்க பரிசோதனை மெசின் வேலை செய்யல; 'சீனா'வுக்கு திருப்பி அனுப்பிய ஸ்பெயின் - ஸ்பெயின் கரோனா பரிசோதனை கருவி

மாட்ரிட்: கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக சீனாவிடமிருந்து வாங்கிய 3.4 லட்சம் பரிசோதனை கருவிகள் சரியாக வேலை செய்யாததால் அந்நாட்டிற்கே ஸ்பெயின் திருப்பி அனுப்பியுள்ளது.

Spain
Spain

By

Published : Mar 27, 2020, 4:08 PM IST

ஐரோப்பிய நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், ஸ்பெயின் நாட்டிலும் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கரோனா வைரஸ் காரணமாக இதுவரை ஸ்பெயின் நாட்டில் 57 ஆயிரத்து 786 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்து 365 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கையை எடுத்துவரும் ஸ்பெயின், கரோனா பாதிப்பின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவிடம் கரோனா பரிசோதனை கருவிகளை வாங்கியது.

அதன்படி சீன நிறுவனம் 3.4 லட்சம் பரிசோதனைக் கருவிகளை ஸ்பெயினுக்கு அனுப்பிவைத்தது. அந்த கருவிகள் சரியாக வேலை செய்யாமல் சோதனை முடிவுகள் தவறாக காண்பிப்பதாகக் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்துவருகிறது. இதையடுத்து சீனாவிடம் வாங்கிய அனைத்து பரிசோதனை கருவிகளையும் அந்நாட்டிற்கே ஸ்பெயின் தற்போது திருப்பி அனுப்பியுள்ளது.

ஸ்பெயினைப் போலவே செக் குடியரசு நாடும் சீனாவிடம் வாங்கிய பரிசோதனை கருவி சரியாக வேலைசெய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாகத் தெரிவித்துவருகிறது.

இதையும் படிங்க:கரோனா அபாயத்தில் ஆப்பிரிக்கா; கண்டத்தை காப்பாற்றுங்கள் - உலக சுகாதார அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details