தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா பரவல்: நள்ளிரவு ஊரடங்கை அமல்படுத்திய ஸ்பெயின் - ஸ்பெயினில் கரோனா பரவல்

மாட்ரிட்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு ஊரடங்கை ஸ்பெயின் அமல்படுத்தியுள்ளது.

Spain PM
Spain PM

By

Published : Oct 26, 2020, 6:50 AM IST

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பெயினில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் அறிவித்துள்ளார். உள்ளூரில் இருக்கும் நிலைமை பொறுத்து பிராந்தியங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்யும் உரிமையை ஆளுநர்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.

தற்போது 15 நாள்கள் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இதை ஆறு மாதங்கள் வரை நீட்டிக்க நாடாளுமன்றத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கரோனா பரவ தொடங்கிய காலத்திலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருந்தது. இதைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கை அந்நாடு அமல்படுத்தியிருந்தது.

ஸ்பெயினில் தற்போதுவரை 11.1 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 35 ஆயிரத்து 752 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: அடுத்தாண்டு மே மாதம் வரை கரோனா இருக்கும் - பிரான்ஸ் அதிபர்

ABOUT THE AUTHOR

...view details