கரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விமான நிலையத்திற்கு வரும் மக்களின் வெப்பத்தை அறிவதற்காக ஸ்மார்ட் ஹெல்மெட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரோம் விமான நிலையத்தில் 'ஸ்மார்ட் ஹெல்மெட்'! - ரோம் விமான நிலையத்தில் 'ஸ்மார்ட் ஹெல்மெட்
ரோம்: விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வெப்பத்தை அறியும் நோக்கில் ஸ்மார்ட் ஹெல்மெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
![ரோம் விமான நிலையத்தில் 'ஸ்மார்ட் ஹெல்மெட்'! smart-helmet-introduced-at-rome-airport-to-check-passengers-temperatures](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7176182-784-7176182-1589343890389.jpg)
அந்த ஸ்மார்ட் ஹெல்மெட்டில் மக்கள் நடமாடும் போதே மக்களின் வெப்பத்தை அறியும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதனைப் பாதுகாப்பு அலுவலர்கள் பயன்படுத்து மக்களை கண்காணித்துவருகின்றனர். இதுகுறித்து ரோம் விமான நிலைய அலுவலர்கள் பேசுகையில், ''ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து மக்களின் நம்பிக்கையாகப் பயணம் மேற்கொள்ள இதுபோன்ற முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்சார் பயன்படுத்தி மக்களின் வெப்பத்தை கண்டறியும் ஹெல்மெட்டை பயன்படுத்தும் முதல் விமான நிலையம் நாங்கள் தான்'' என்றார்.
இதையும் படிங்க:விடுவிக்கப்பட்ட சிக்னஸ் சரக்கு விமானம்!