தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரஷ்யாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்! - அமலாக்கத் துறை அலுவலர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 6 அமலாக்கத் துறை அலுவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

Russia
Russia

By

Published : Dec 12, 2020, 7:59 PM IST

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியில் உள்ள கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அலுவலகம் வெளியே தற்கொலை படைத் தாக்குதல் நடத்தியது. இதில் அமலாக்கத் துறையைச் சேர்ந்த ஆறு அலுவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய தீவிரவாத எதிர்ப்பு கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் நிக்கோலை மாக்ஸிமோவ் கூறுகையில், "சந்தேகத்திற்கு இடமான நபரை கைது செய்ய முயற்சித்தோம். ஆனால் அவர் வெடிகுண்டை வெடிக்க செய்து குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்" என்றார்.

கராச்சே-செர்கெசியா பிராந்தியத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ரஷ்ய தீவிரவாத எதிர்ப்பு கமிட்டி தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு காகசஸ் பகுதியில் உள்ள செச்சன்யா, கராச்சே-செர்கெசியா ஆகிய பிராந்தியங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்புகள் குறிப்பாக ஐஎஸ் அமைப்பின் தொடர்புடைய குழுக்கள் இந்த குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details