தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு - ஜெர்மனியில் துப்பாகிச் சூடு

ஹாலே: ஜெர்மனியின் ஹாலே நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

german

By

Published : Oct 10, 2019, 7:38 AM IST

ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் ஹாலே நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் உள்ள ஒரு உணவகத்துக்குள் திடீரென புகுந்த இரண்டு பேர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காவல் துறையினர் வருவதை அறிந்து துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நகர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தப்பியோடிய மற்றவரை தீவிரமாக தேடிவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details