தெற்கு அயர்லாந்தில் சிலர் செம்மறி ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்துவந்துள்ளனர். அவர்களின் ஆடுகள் திடீரென்று தொடர்ச்சியாகப் இனப்பெருக்க செயலில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த செம்மறி ஆட்டின் உரிமையாளர்கள், ஆடுகள் குடித்த தண்ணீரை பரிசோதனை செய்ததில், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
என்னவென்றால், ஆடுகள் குடித்த நீரில் வயகரா கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை செய்ததில், ஃபைசர் என்ற மருந்து உற்பத்தி ஆலையிலிருந்து 755 டன்னுக்கும் அதிகமான வடிகட்டப்படாத வயகரா கழிவுகளை ரிங்காஸ்கிடி துறைமுகத்தின் நீரில் கடந்த வாரம் கொட்டியதை ஒப்புக் கொண்டுள்ளது.