சிரியாவில் எட்டு வருடங்களாக நடைபெற்றுவந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடனான போரில் அவர்களை பகவுஸ் என்ற சிறிய பகுதிக்குள் முடக்கியுள்ளது அமெரிக்கா உதவியுடன் இயங்கும் சிரியா பாதுகாப்புப்படை.
சிரியாவின் சீற்றத்தால் பணிந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் - சிரியா
டமஸ்கஸ்: சிரியாவில் நடைபெற்றுவந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடனான போர் கிட்டத்தட்ட முடிவடைந்ததாக சிரிய பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
![சிரியாவின் சீற்றத்தால் பணிந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2722880-666-03ae6f4a-a926-4086-ba4d-daaad97c9f2a.jpg)
தமஸ்கஸ்
இந்நிலையில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் எல்லைகளில் சரணடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிரிய பாதுகாப்புப்படையின் செய்தி தொடர்பாளரான கினோ கேப்ரியல் கூறுகையில், கிட்டத்தட்ட போர் முடிவடைந்துவிட்டதாகவும், தோல்வியின் விளிம்பில் பயங்கரவாதிகள் போராடிவருவதாகவும் கூறினார்.