கடந்த 1943 இல் கிழக்கு ஆபிரிக்காவின் சான்சிபாரில் சீக்கிய குடும்பத்தில் பிறந்த கார்பால் கவுர் சந்து (Karpal Kaur Sandhu), லண்டனில் செவிலியராக பணியாற்றி வந்தார். பின்னர், தனது 27ஆம் வயதில் காவல்துறையில் இணைந்தார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கார்பால், பல்வேறு சாதனைகளை ஆண்களுக்கு நிகராக நிகழ்த்திக் காட்டினார். மூன்று ஆண்டுகள் மட்டுமே பணி செய்திருந்தாலும், அவரை பின்தொடர்ந்து பல பெண்கள், காவல் துறையில் சேரும் வகையில் முன்மாதிரியாக திகழ்ந்தார். எதிர்பாராத வகையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், முதல் தெற்காசிய சீக்கிய பெண் காவலரான கார்பால் கவுர் சந்து, பணியில் இணைந்து 50 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தேசிய சீக்கிய காவல் துறை சங்கம், இங்கிலாந்து மெட் காவல் துறையுடன் இணைந்து மெய்நிகர் காணொலி விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.