விலங்குகள், பறவைகள் சிலவற்றை அழிவின் விளிம்பு நிலையை எட்டியுள்ளது. இப்பட்டியலில் வெள்ளை காண்டாமிருகமும் இணைந்துள்ளது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் இருந்த நிலையில் தற்போது 600 காண்டாமிருகங்களே உள்ளன. அதிலும் பெரும்பாலானவை கருப்பு காண்டாமிருகம்.
உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகம்; செயற்கை முறையில் கருத்தரிப்பு! - கருத்தரிப்பு
உலகின் கடைசி இரண்டு வெள்ளை காண்டாமிருகங்களிடமிருந்து செயற்கை முறையில் 7 முட்டைகளை வெற்றிகரமாக ஆய்வாளர்கள் கருத்தரிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் உலகின் கடைசி இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் நைரோபியின் வடக்கு பகுதியில் வாழ்ந்து வந்தன. அவைகளுடன் ஒரு ஆண் வெள்ளை காண்டாமிருகம் இருந்தது, சமீபத்தில் அந்த ஆண் காண்டாமிருகம் உயிரிழந்தது. இதையடுத்து இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்களை வைத்து செயற்கை முறையில் 10 முட்டைகளை கருத்தரிக்க ஆய்வாளர்கள் முயற்சித்தனர்.
இதில் ஏழு முட்டைகள் வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்துள்ளன. முட்டைகளின் வளர்ச்சி தொடர்ந்து ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்த இனத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுவதற்கு ஆய்வாளர்கள் செய்துள்ள முயற்சியை பலரும் பாராட்டிவருகின்றனர்.