உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளின் முன்னணி விஞ்ஞானிகளும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், கரோனா தொற்றுக்கான தடுப்பூசி மருந்தை தாங்கள் கண்டுப்பிடித்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இந்தத் தடுப்பூசி மருந்து உற்பத்தி இரண்டு வாரங்களுக்குள் தொடங்கும் எனவும் ரஷ்யா சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார். இறுதிக்கட்ட சோதனை முடிவதற்கு முன்பே மருத்தை வெளியிட்டதாக ரஷ்யா மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், உலக சுகாதார அமைப்பினரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
ரஷ்யாவின் பிரபல மருத்துவர் சுகாதார அமைச்சகக் குழுவிலிருந்து விலகல் - கரோனா தடுப்பூசி வெளியீடு எதிரொலியா? - ரஷ்யா கரோனா தடுப்பூசி
மாஸ்கோ : இறுதிக்கட்ட சோதனை முடிவதற்கு முன்பே கரோனா தடுப்பூசியை ரஷ்யா வெளியிட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் பிரபல மருத்துவர் சுகாதார அமைச்சகக் குழுவிலிருந்து விலகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய சுகாதார அமைச்சகக் குழுவில் முக்கிய பொறுப்பிலிருந்த பிரபல மருத்துவர் அலெக்சாண்டர் சுச்சலின் திடீரென விலகியுள்ளார். முறையாக பரிசோதனை செய்யாத மருந்தை அறிமுகப்படுத்துவதால்தான் இவர் ராஜினாமா செய்ததாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக மருத்துவர் சுச்சலின் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒரு தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்வதற்கு முன்பு அதன் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். மனிதர்களுக்கு எவ்வுளவு பாதுகாப்பு என்பதையும் நிச்சயம் ஆராய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.