தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐநாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்து அறிமுகம்செய்யும் ரஷ்யா! - ரஷ்யா

மாஸ்கோ: ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா இன்று அறிமுகம் செய்யவுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி
ஸ்புட்னிக் வி தடுப்பூசி

By

Published : Dec 2, 2020, 4:58 PM IST

உலகையே ஆட்டிப்படைத்த கரோனா பெருந்தொற்றால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதற்கிடையே, கரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதன் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஐநாவில் ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி குறித்து அந்நாடு அறிமுகம் செய்யவுள்ளது. அப்போது, தடுப்பூசி குறித்த விவரங்களை ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கவுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில், தடுப்பூசி தயாரித்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விலையில்லா கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில், மருந்தைத் தயாரித்த விஞ்ஞானிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய நாட்டின் ஐநாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி வாசிலி நெபென்சியா தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 3, 4ஆம் தேதி, கரோனா குறித்து விவாதிக்கும் வகையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள், ஐநா உயர்மட்டத் தலைவர்கள், தடுப்பூசி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details