தமிழ்நாடு

tamil nadu

ரஷ்யாவில் கரோனாவால் பாதிப்பு குறைவு: உண்மையில் அதுதான் அங்கு நிலவரமா?

By

Published : Mar 25, 2020, 1:12 PM IST

மாஸ்கோ: சீனாவின் எல்லையை ஒட்டிய நாடான ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

ரஷ்யாவில் கரோனா நோயாளிகள் குறைவு! உண்மையில் அதுதான் அங்கு நிலவரமா?
ரஷ்யாவில் கரோனா நோயாளிகள் குறைவு! உண்மையில் அதுதான் அங்கு நிலவரமா?

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

ரஷ்யாவில் கரோனா நோயாளிகள் குறைவு

ஆனால் சீனாவுடன் சுமார் 4,200 கிலோ மீட்டர் பரப்பளவு பகிர்ந்துள்ள ரஷ்யாவில், ஒருவர் உயிரிழந்தும், 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், எண்ணிக்கையை ரஷ்யா மறைத்துள்ளதா என ஐரோப்பா வல்லுநர்கள், செய்தியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து ரஷ்யாவின் அரசு நுகர்வோர் கண்காணிப்புக் குழு கூறுகையில், "மொத்தம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மார்ச் மாத தொடக்கத்தில்தான் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால் ரஷ்யா பிப்ரவரி மாதத்திலேயே எச்சரிக்கையாக அனைத்து எல்லைகளையும் மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனா - தாய்லாந்தில் அவசர நிலை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details