ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2036ஆம் ஆண்டுவரை அதிபர் பதவியில் நீடிப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான மக்கள் ஆதரவை அறிந்துகொள்ள ஜூலை 1ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருந்தனர். இருப்பினும் கரோனா அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் அதிகமாக வருவதை தடுப்பதற்காக வாக்கெடுப்பு ஒரு வாரத்திற்கு முன்னரே தொடங்கியது. மக்கள் பலரும் ஆர்வமாக முகக்கவசம் அணிந்தபடி வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.
'அடுத்த 16 ஆண்டுகளுக்கு புதின்தான் அதிபர்'... வாக்கெடுப்பில் வெளியான மக்களின் குரல்!
மாஸ்கோ: அடுத்த 16 ஆண்டுகளுக்கு புதின் அதிபராக தொடரவே மக்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர் என ரஷ்ய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
putin
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதின் அடுத்த 16 ஆண்டுகளுக்கு அதிபராக தொடர 77. 93 விழுக்காடு மக்கள் விருப்பம் காட்டியுள்ளனர். 21.6 விழுக்காடு மக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், புதின் 2036ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடருவார் எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்தத் தேர்தல் செல்லாது என்றும், பொய்யானது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.