வெனிசுலாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து, பாதுகாப்புப்படை தன் பக்கம் உள்ளதாக அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ கூறினார். மேலும், இதனைச் சுட்டிக்காட்டி நாட்டு மக்கள் அனைவரும் அதிபர் மதுரோவுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்க வேண்டும் என்றும், இது விடுதலைக்கான இறுதிக்கட்ட போராட்டம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அசாதாரண சூழல் நிலவும் வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்சருடன் ரஷ்ய அமைச்சர் சந்திப்பு!
மாஸ்கோ: வெனிசுலாவில் அசாதாரண சூழல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ரஷ்யா, வெனிசுலா ஆகிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதனையடுத்து, தலைநகர் கரகாசில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மதுரோ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். அங்கு நிலவும் அசாதாரண சூழல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் அரீஸா சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக பேசிய செர்கே லாவ்ரோவ், " வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்னை, ராணுவப் புரட்சியை மேற்கொள்ள முயன்றது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.