'காதல்' என்பது வெறும் வார்த்தை அல்ல அது மனிதர்களின் மனதில் இருக்கும் ஒரு இணை பிரியா அங்கம். இளமைப் பருவத்தில் தொடங்கும் காதலானது முதுமை வரை நம்மை பின் தொடர்ந்துவருகிறது. இவ்வாறான காதலை வெளிப்படுத்த தயங்கும் மனிதர்களின் மத்தியில், ஒரு சிலர் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி அசத்துவதுண்டு.
அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது காதலியிடம் லவ் ப்ரபோஸ் செய்வதற்காக, ஜிபிஎஸ் உதவியுடன் 4 ஆயிரத்து 451 மைல்களை சுமார் 6 மாதம் காலங்களில் கடந்து சென்று புரோபோஸ் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதே போல், சமீபத்தில் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தன்று, மற்றுமொரு வித்தியாசமான ப்ரபோசல் வெகுவாக கவர்ந்தது.அதில், ரஷ்யா நாட்டின் மாஸ்கோவில் உள்ள அலபினோ பயிற்சி மையத்தில் தனது காதலி அலெக்ஸாண்ட்ராவிடம் காதலை தெரிவிக்க கசண்ட்ஸேவ்(Kazantsev) என்ற ராணுவ வீரர், 16 பீரங்கி வாகனங்களை இதய வடிவில் நிறுத்தினார்.