ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக மைக்கல் மிஷூஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பமாக, கடந்த புதன்கிழமை (ஜனவரி 15) பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் கூண்டோடு ராஜினமா செய்தது.
இந்த ராஜினாமா முடிவு அந்நாட்டு அதிபர் புதினின் உத்தரவின் பேரில்தான் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு புதினின் அதிபர் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அதன்பின் அதிபர் பொறுப்புக்கு வருபவருக்கு கடிவாளம் போடும் நோக்கிலேயே இத்தகைய மாற்றங்களை அவர் மேற்கொண்டதாகத் தெரிகிறது.