வளைகுடா நாடுகள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று முக்கிய பிராந்தியங்களின் மத்தியில் உள்ள மெடிட்டரினியன் கடல் ராஜரீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தக் கடலின் கிழக்குப் பகுதியின் உரிமைத் தொடர்பாக கிரீஸ் மற்றும் துருக்கி இடையே தற்போது மோதல் போக்கு நிலவிவருகிறது.
இந்தக் கடல் பகுதியில் உள்ள எரிவாயுவுக்கு உரிமைக் கொண்டாடுவதில் நடக்கும் போட்டியில் இரு நாடுகளும் கடும் பூசல் மேற்கொண்டுவருகின்றன.