தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உக்ரைனில் ராணுவ நடவடிக்கை - புதின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரஷ்யா உக்ரைன் மோதல்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அதிகாரப்பூர்வமாக இன்று போர் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

விளாதிமிர் புதின்
விளாதிமிர் புதின்

By

Published : Feb 24, 2022, 9:20 AM IST

Updated : Feb 24, 2022, 9:27 AM IST

உக்ரைன் மீதான போரை வெளிப்படையாக அறிவிக்கும் விதமாக அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிபர் புதின் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏதும் ரஷ்யாவுக்கு இல்லை என்று தெரிவித்த புதின், இந்த சம்பவத்திற்கு உக்ரைன் அரசுதான் பொறுப்பு எனக் கூறியுள்ளார். ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக குறுக்கே நிற்க யாரேனும் முற்பட்டால் அவர் இதுவரை காணாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதின் எச்சரித்துள்ளார்.

அத்துடன் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் விதமாக உக்ரைன் படை வீரர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு போர் களத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு நேட்டோ நாடுகள் கூட்டணி தக்க பதிலடி தரும் என பைடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வந்தது வலிமை - திரையரங்குகளில் திருவிழா!

Last Updated : Feb 24, 2022, 9:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details