உலகின் பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டியுள்ளன. இங்கு விண்வெளி தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா தனக்கென்று தனியாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைக் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ராக்கெட் மற்றும் விண்வெளி நிறுவனமான எனர்ஜியா கட்ட இருக்கும் விண்வெளி மையத்தில் 3 முதல் 7 பகுதிகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2 முதல் 4 பேர் வரை தங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, விண்வெளி தொடர்பான ரஷ்ய அகாடமி ஆப் சயின்சஸ் மாநாட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பிரிவு விமான இயக்குநர் விளாடிமிர் சோலோவையோவ் கலந்துகொண்டு உரையாற்றினார்.