தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரஷ்ய தாக்குதல்: உக்ரைனில் 137 பேர் உயிரிழப்பு - russia declares war on ukraine

ரஷ்ய படையினரின் முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 316 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

Russia Ukraine Crisis News
ரஷ்ய படையினர் தாக்குதலில் 137 பேர் உயிரிழப்பு

By

Published : Feb 25, 2022, 10:24 AM IST

Updated : Feb 25, 2022, 10:50 AM IST

உக்ரைன்: உக்ரைன் அதிபர் விளாம்திர் ஜெலென்ஸ்கி ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் 90 நாள்களுக்கு படை திரட்டிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் முதல் நாள் படையெடுப்பில் 137 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 316 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த பொருளாதார தடையின் மூலம் டாலர், யூரோ, பவுண்ட் மூலமாக நடைபெறும் ரஷ்யாவின் வர்த்தக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கி நேற்று (பிப். 24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனில் நிலவி வரும் போர் சூழலால் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் அந்நாட்டுக்கு, பொருளாதார ரீதியாக உதவ தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பொருளாதார வகையில் உடனடி தீர்வு காண உலக வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைனில் தவிக்கும் நெல்லை மாணவரை மீட்க கோரிக்கை

Last Updated : Feb 25, 2022, 10:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details