தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வைரத்துக்குள் வைரம் - ரஷ்யாவில் நிகழ்ந்த அதிசயம்!

ரஷ்யாவில் புதிதாக எடுக்கப்பட்ட வைரத்துக்குள் மற்றொரு வைரம் இருப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் திகைத்துப்போயுள்ளனர்.

Matryoshka diamond

By

Published : Oct 8, 2019, 10:11 PM IST

Updated : Oct 13, 2019, 12:46 PM IST

ரஷ்யாவின் சைபிரியா பகுதியில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட ஒரு வைரத்துக்குள் மற்றொரு வைரம் இருந்துள்ளது. இதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் திகைத்துப்போயுள்ளனர்.

ஏனென்றால், மனிதன் வைரங்களை வெட்டியெடுக்கத் தொடங்கியது முதல் இது போன்ற ஒரு வைரத்தை யாரும் எடுத்ததில்லை. வெளியே உள்ள வைரம் 0.62 காரட்டும் உள்ளே இருக்கும் வைரம் 0.02 காரட்டும் இருப்பதாக ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த வைரம் 80 கோடி ஆண்டுகள் பழமையானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். முதலில் உள்ளிருக்கும் வைரம் உருவானதாகவும் பின்னர், சில காலத்திற்குப் பின் வெளியேவுள்ள வைரம் உருவானதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், உள்ளிருக்கும் வைரம் மட்டும் நகரும் வகையில் உள்ளது, வெளிப்புறம் உள்ள வைரத்துக்கும் உட்புறம் உள்ள வைரத்துக்கும் இடையே உள்ள இடைவேளையும் மிகவும் அற்புதமாகவுள்ளது என்று கூறியுள்ளனர்.

பொதுவாக ஒரு தனிமத்துடன் மற்றொரு தனிமம் கலப்பது என்பது இயல்பாக நடக்கக்கூடியதுதான் என்றாலும் வைரத்துக்குள் இன்னொரு வைரம் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும், இது பார்க்க மேட்ரியோஷ்கா பொம்மைபோல இருப்பதால் இதை மேட்ரியோஷ்கா வைரம் ( Matryoshka diamond) என்றே ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே:'உருத்தெரியாமல் அழித்துவிடுவோம்!' - துருக்கியை மிரட்டும் ட்ரம்ப்!

Last Updated : Oct 13, 2019, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details