கீவ்:உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் பிப். 24ஆம் தேதி முதல் 10 நாள்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன. அந்த வகையில் நேற்று(மார்ச். 4) சபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மீட்புப்பணிக்காக போரை நிறுத்திய ரஷ்யா - Russia ceasefire

12:17 March 05
மீட்புப்பணிக்காக உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துமாறு ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மீட்புப்பணிக்காக உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துமாறு ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.30 முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யா தரப்பிலிருந்து, மனிதாபிமான அடிப்படையில் மரியபோல், வோல்னோவாக்க நகரங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நோக்குடன் உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இரு தரப்புக்கும் இடையேயான இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தையின்போது எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க:அணுக்கரு பேரழிவிலிருந்து தப்பியதா ஐரோப்பா கண்டம்