தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா...! - எபிவாகரோனா

கோவிட்-19 எதிரான இரண்டாவது தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், கரோனா நோய்க் கிருமிக்கு எதிராக 3ஆவது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்குவோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மார்தட்டியுள்ளார்.

Russia approves another Covid 19 vaccine
Russia approves another Covid 19 vaccine

By

Published : Oct 15, 2020, 3:19 PM IST

ரஷ்யா தனது முதல் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக்-வி என்ற பெயரில் ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது, எபிவேகரோனா (EpiVacCorona) என்ற தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக, ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி ஆகும்.

"எனக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் எபிவாகொரோனா என்ற இரண்டாவது கரோனா எதிர்ப்பு தடுப்பூசியை பதிவு செய்துள்ளது" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறினார்.

சைபீரியாவை தளமாகக் கொண்ட வெக்டர் நிறுவனம் இதை உருவாக்கியது. எபிவாகொரோனா அதன் ஆரம்ப கட்ட மனித சோதனைகளை செப்டம்பரில் நிறைவு செய்தது. மருந்து சோதனைகள், மனித சோதனைகளின் முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

"நாங்கள் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நாங்கள் எங்கள் வெளிநாட்டு கூட்டாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம், வெளிநாட்டில் எங்கள் தடுப்பூசியை ஊக்குவிப்போம்.

நோவோசிபிர்ஸ்கை தளமாகக் கொண்ட வெக்டர் மையம் எபிவேகரோனா என்ற இரண்டாவது கரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது" என்று புதின் கூறினார்.

மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ஸ்பூட்னிக் வி, ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் பயன்படுத்த உரிமம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details