சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரொனா) வைரஸ் என்ற தொற்று நோய், தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலியில் இந்நோய் தாக்குதல் தீவிரமாக உள்ளது. இதனால் அந்நாட்டில் இதுவரை 827 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த அபாயகரமான சூழலில், இத்தாலி மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல ஏப்ரல் 3ஆம் தேதி வரை அந்நாட்டு அரசு பயணத் தடைவிதித்துள்ளது. பல விமான நிலையங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன. உணவகங்கள், மருந்தகங்களைத் தவிர அனைத்து விதமான கடைகளையும் மூடும் படி அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.