தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வாட்டிகன் தேவாலயத்தின் கார்டினலுக்கு கரோனா

ரோம்: வாட்டிகன் தேவலாயத்தில் உள்ள கார்டினல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு தற்போது உறுதியாகியுள்ளது.

Rome cardinal
Rome cardinal

By

Published : Mar 31, 2020, 11:45 AM IST

கரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பின் காரணமாக பலியாகியுள்ளனர்.

இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள வாடிகன் நகரம் ரோமன் காதோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது. வாடிகன் நகரம் இத்தாலி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் தன்னாட்சி பெற்ற நாடாக செயல்பட்டுவருகிறது.

இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடையத் தொடங்கியதை அடுத்து வாடிகன் நகரம் முற்றிலும் லாக் டவுன் செய்யப்பட்டது. அங்கு போப் ஆண்டவர் தலைமையில் நடைபெறும் அன்றாட பிரார்த்தனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொது மக்கள் அனுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள புனிதர்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படாத வண்ணம் தீவிர கண்கானிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கார்டினல் ஒருவருக்கு கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்தவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ்க்கு மூன்று நாட்களுக்கு முன் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது தற்போது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் பாதுகாப்பாக உள்ளார் என செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா - போப் ஆண்டவர் தனிமையில் பிரார்த்தனை!

ABOUT THE AUTHOR

...view details