அரசுமுறைப் பயணமாக ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு பாதுகாப்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, இந்தியாவில் தொழில் முனைவோர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஃபிரான்ஸ் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தியாவிலும் தொழில்களைத் தொடங்கலாம் எனவும் அந்நாட்டு தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல், பிரதமர் மோடி தொடங்கிய ‘மேக் இன் இந்தியா’ திட்டங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கிய ராஜ்நாத் சிங், ஜிஎஸ்டி வரி குறித்தும் தொழிலதிபர்களுக்கு விளக்கினார்.
மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 - 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் பாதுகாப்பு எக்ஸ்போவில் (DefExpo) பங்கேற்கவும் அந்நாட்டு தொழில் முனைவோருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:நாட்டைக் காக்க ரஃபேல், ரஃபேலை காக்க எலுமிச்சை - நெட்டிசன்களிடம் சிக்கிய ராஜ்நாத் சிங்!