Rafale Latest மூன்று நாள் அரசு முறை பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றிருக்கிறார். இன்று அவரிடம் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
ரூ. 670 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்ட அந்த விமானத்துக்காகச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர். பூஜைகளை முடித்த பின் ராஜ்நாத் சிங், அந்த ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஃபேலில் எனது பயணம் மிகவும் சிறப்பாகவும் வசதியாகவும் இருந்தது. போர் விமானத்தில் ஒலியின் வேகத்தில் நான் பறப்பேன் என்று ஒருநாளும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை" என்றார்.
மேலும், "2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதல் 18 விமானங்களும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் அனைத்து 36 விமானங்களும் நமக்கு வழங்கப்படும். இது நமது தற்காப்பின் ஒரு பகுதியே தவிர யாரையும் அச்சுறுத்த இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: ஆகாசத்த நான் பார்க்குறேன் - ராஜ்நாத்தின் ரஃபேல் பயணம்!