பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும் இளவரசர் ஆண்ட்ரூவின் மகளுமான இளவரசி பீட்ரைஸூக்கும் (31), பிரபல தொழிலதிபரான எடோர்டோ மாபெல்லி மோஷிக்கும் கடந்த மே மாதம் லண்டனில் திருமணம் நடைபெற இருந்தது.
எளிய முறையில் நடந்த பிரிட்டன் இளவரசியின் திருமணம் - பிரிட்டன் இளவரசி பீட்ரைஸ்
லண்டன்: கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே பிரிட்டன் ராணியின் பேத்தி இளவரசி பீட்ரைஸூக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
![எளிய முறையில் நடந்த பிரிட்டன் இளவரசியின் திருமணம் Queen's granddaughter Princess Beatrice weds in secret ceremony: Report](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:10:53:1594993253-8065562-sdsdsd.jpg)
Queen's granddaughter Princess Beatrice weds in secret ceremony: Report
ஆனால் கரோனா வைரஸ் காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இளவரசி பீட்ரைஸூக்கும் எடோர்டோ மாபெல்லி மோஷிக்கும் நேற்று (ஜூலை 17) லண்டனில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இத்திருமண நிகழ்வில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (94), அவரது கணவர் பிலிப், இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் கலந்துகொண்டனர். கரோனா வைரஸ் எதிரொலியாக திருமண நிகழ்வில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.