தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தொடங்கியது பிரிட்டன் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் - பிரெக்ஸிட்டுக்கே முன்னுரிமை! - பிரிட்டன் அரசு எலிசபெத்

லண்டன்: பிரிட்டன் அரசு எலிசபெத் ராணி உரையோடு மீண்டும் பிரிட்டன் நாடாளுமன்றம் கூடியுள்ளது.

UK parliament Queen speech, UK parliament queen speech, பிரிட்டன் நாடாளுமன்றம்
UK parliament Queen speech

By

Published : Dec 20, 2019, 4:22 AM IST

சென்ற வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 650 தொகுதிகளில் 365 தொகுதிகளை வென்று அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இதையடுத்து, போரிஸ் அரசின் திட்ட அறிக்கையை பிரிட்டன் நாடாளுமன்ற்தில் படித்துக்காட்டிய அந்நாட்டு அரசி எலிசபெத், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார்.

திட்ட அறிக்கையில் பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தத்துக்கு முன்னுரிமை அளித்துள்ள அரசு, நாளை இதுகுறித்து முக்கிய வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.

31ஆம் தேதியோடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் (பிரெக்ஸிட்) என திட்டவட்டமாக உள்ள பிரதமர் போரிஸுக்கு நாடாளுமன்றத்தில் தேவைக்கும் அதிகமாக பெரும்பான்மை இருப்பதால் ஒப்பந்தம் எளிதில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெக்ஸிட்டை தவிர, வீட்டுவசதி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவையும் திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: பிரெக்ஸிட் என்றால் என்ன?

ABOUT THE AUTHOR

...view details