கரோனாவின் கோரப் பிடியில் பிரிட்டன் சிக்கித் தவித்து வரும் வேளையில், எந்த ஒரு ஆடம்பர நிகழ்ச்சிகளும் இன்றி விண்டசர் கோட்டையில் தனது கணவரும் இளவரசருமான பிலிப்புடன் ராணி இரண்டாம் எலிசபெத் தன் 94வது பிறந்தநாளை அமைதியாகக் கொண்டாடினார்.
முன்னதாக, கரோனா பெருந்தொற்று காரணமாகப் பிரிட்டனில் நிலவிவரும் அசாதாரண சூழலில் தன் பிறந்தநாளையொட்டி வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறு ராணி எலிசபெத் வேண்டுகோள் விடுத்திருந்தார்.