தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரெக்ஸிட்: ராணி எலிசபத் ஒப்புதல்! - பிரிட்டன் ராணி எலிசபெத்

பிரிட்டன் வரலாற்றில் முக்கிய சட்டமான பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் ராணி எலிசபெத் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Elizabeth II approves Brexit
Elizabeth II approves Brexit

By

Published : Jan 23, 2020, 9:36 PM IST

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேற முடிவு செய்தது. அதற்காக 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதற்கு 51 விழுக்காடு மக்கள் ஐரேப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர்.

இருப்பினும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் நீண்ட இழுபறி நிலவியது. இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலைச் சந்தித்தார்.

2019ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்றது. போரிஸ் ஜான்சன் மீன்டும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அவர் பெரும் முனைப்பு காட்டினார்.

டிசம்பர் மாத இறுதியில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் ராணி எலிசபெத் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பிரெக்ஸிட் செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரிட்டன் மகாராணி எலிசபெத் பிரெக்ஸிட் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே, இது இப்போது பிரெக்ஸிட் சட்டமாக மாறியுள்ளது. இந்தச் சட்டம் பிரிட்டனை ஜனவரி 31ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வழிவகை செய்கிறது" என்று பதிவிட்டுட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரெக்ஸிட் என்றால் என்ன? #brexit

ABOUT THE AUTHOR

...view details