ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசுமுறை பயணமாக இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக, வாட்டிகனுக்கு நேற்று சென்றிருந்த புடின், அங்கு போப் பிரான்சிஸை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது இருவரும் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.
போப் பிரான்சிஸுடனான, ரஷ்ய அதிபர் புடினின் சந்திப்பு போப் பிரான்சிஸை அதிபர் புடின் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். வரலாற்றில் ரஷ்ய நாட்டிற்கு எந்த ஒரு போப்பும் பயணம் மேற்கொண்டதில்லை. ஆனால் புடின், போப் பிரான்சிஸிடம் இதுகுறித்து பேசியதில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்ஜி லாவ்ராவ் விளக்கமளித்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு அதிபர் புடின் 50 நிமிடங்கள் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது.