மாஸ்கோ:ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படஉள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், "ரஷ்யா முழுவதற்கும் அக்டோபர் 30ஆம் தேதி முதல், நவம்பர் 7ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த முடிவு கரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டு மக்கள், நிலைமையை உணர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.