தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து' - ரஷ்யா அதிபர் - விளாடிமிர் புடின்

மாஸ்கோ: அடுத்த வாரம் முதல் மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை அளிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

Putin
Putin

By

Published : Dec 3, 2020, 12:12 PM IST

கடந்த ஆகஸ்ட் மாதம், உலகின் முதல் நாடாக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்திருந்தது. மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு முன்னரே தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால், சர்வதேச அளவில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், நேற்று (டிச. 02) மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை அளிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். தடுப்பு மருந்தை வழங்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து புடின் மேலும் கூறுகையில், "இன்னும் சில தினங்களில் 20 லட்சம் தடுப்பு மருந்து டோஸ்கள் தயாராகிவிடும். இதன்மூலம் அனைவருக்கும் தடுப்பு மருந்தை வழங்க முடியாவிட்டாலும்கூட, மருத்துவர்கள் ஆசிரியர்கள் என அதிக ஆபத்தான இரு துறைகளில் பணிபுரிவோருக்கு தடுப்பு மருந்தை வழங்க முடியும்" என்றார்.

முன்னதாக, ஃபைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு பிரிட்டன் நேற்று (டிச. 02) ஒப்புதல் அளித்திருந்தது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து மூன்றாம்கட்ட மருத்துவச்சோதனை தற்போது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதன் முதல்கட்ட முடிவுகளில் தடுப்பு மருந்து 91.4 விழுக்காடு பலனளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட நாடுகளிலும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட சோதனை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். மூன்றாம்கட்ட மருத்துவச் சோதனையில் தடுப்பு மருந்து வழங்கப்பட்ட 18 ஆயிரத்து 794 பேரில் 39 பேருக்கு மட்டுமே கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து: 'வயதானவர்களுக்கே முன்னுரிமை'

ABOUT THE AUTHOR

...view details