ரஷ்யா நாட்டில் சைபீரியா மாகாணத்தில் உள்ள நோரில்ஸ்க் நகரில் மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தொட்டியிலிருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும் அருகிலிருக்கும் அம்பர்ன்யா நதியில் கலந்தது. இச்சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் அலுவலர்கள் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய்யை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்குள், அம்பர்ன்யா நதி முழுவதும் எண்ணெய் கலந்துவிட்டது.
இதுகுறித்து காணொலிக்காட்சி மூலம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், எண்ணெய் கசிவை தாமதமாக கண்டறிந்த அலுவலர்களை மீது கோபம் கொண்டார். மேலும், அப்பகுதியில் அவசரநிலையை பிறப்பித்து நிலைமையை சீராக்க உத்தரவிட்டுள்ளார்.