கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்தவரும், மனித உரிமை செயல்பாட்டாளரும், ஆப்ரிக்க அமெரிக்க அமைச்சருமான மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை லெஸ் பெய்ன் (Les Payne) எழுதியிருக்கிறார். புலிட்சர் விருது பெற்ற புலனாய்வு ஆராய்ச்சியாளரும், பத்திரிகையாளருமான லெஸ் பெய்ன் புத்தகம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
'த டெட் ஆர் அரைஸிங்: த லைப் ஆப் மால்கம் எக்ஸ்' (The Dead Are Arising: The Life of Malcolm X) என்னும் இந்தப் புத்தகத்தை பெய்னின் மகள் தமாரா பெய்ன் இணைந்து எழுதியிருக்கிறார்.
'இனவெறியின் தடைகளை கடந்துவர இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவார்கள் என்று மால்கம் எக்ஸ் தன்னை பின்பற்றுபவர்களை ஹார்ஃபோர்டில் கண்டபோது சொன்ன கூற்றினை' மையமாக வைத்து, இந்தப் புத்தகத்தின் தலைப்பு வைக்கப்பட்டதாக, புத்தக விளக்கவுரை கூறுகிறது.